search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வட்டி கடைக்காரர் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுமா?
    X

    வட்டி கடைக்காரர் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுமா?

    வட்டி கடைக்காரர் மற்றும் பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாததால் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த கொலை வழக்கை கண்டுபிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பஸ்நிலையம் அருகே வட்டிக்கடை நடத்தி வந்த ராஜேஷ் ஷியாம் தூத் 2014-ம் ஆண்டு கடையில் இருந்த போது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடையில் இருந்த பலகோடி ரூபாய் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

    அதேபோல் முத்தியால்பேட்டை கணபதி நகரில் வீட்டில் தனியாக இருந்த கலைவாணி என்பவர் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    இந்த இரு கொலை வழக்கிலும் இதுவரை யாரையும் கைது செய்ய வில்லை.

    முதல் - அமைச்சர் நாராயணசாமி இந்த இரு கொலை வழக்கையும் மறுபடியும் தீவிர விசாரணைக்கு எடுத்து விசாரிக்கும் படி உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து கலைவாணி கொலை வழக்கை விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் ஒரு படையும், அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் ஒரு படையும், சப்-இன்ஸ் பெக்டர் முத்துகுமார் தலைமையில் மற்றொரு படையும் அமைக்கபட்டன.

    அதேபோல வட்டிக்கடைக்காரர் கொலை வழக்கில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். ஆனால் இரு கொலைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

    பெண் கொலையில் கூட துப்பு துலக்க வாய்ப்பு இல்லாத அளவுக்கு சிக்கலானதாக உள்ளது. அந்த கொலை வழக்கில் போதுமான தடயங்கள் சிக்கவில்லை.

    ஆனால் வட்டிக்கடைக் காரர் கொலையில் போலீசாருக்கு பல்வேறு தடயங்கள் கிடைத்து உள்ளன. அனாலும் குற்றவாளிகள் யார்? என்பதை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்த கொலை வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

    எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த கொலை வழக்கை கண்டுபிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

    சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்கனவே இந்த கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×