search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசல் போராட்டம் தமிழகத்தை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும்: பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    நெடுவாசல் போராட்டம் தமிழகத்தை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும்: பொன்.ராதாகிருஷ்ணன்

    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சில அமைப்புகள் நடத்தும் போராட்டம் தமிழகத்தை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும் என மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    சென்னை:

    ஹைட்ரோ கார்பன்கள் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் போராட்டம் நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ் ணன் கூறியதாவது:-

    ஒரு திட்டம் வேண்டாம் என்றால் என்ன காரணத்துக்காக வேண்டாம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்த பகுதியில் எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 2008-ம் ஆண்டில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு எதுவும் இல்லை.அப்படியிருந்தும் அப்போதைய அரசு கிடப்பில் போட்டு விட்டது.

    தற்போதைய அரசு அதை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தால் விவசாய நிலம் பாதிப்பு இல்லை. மிக குறைந்த அளவாக அதாவது 15 ஏக்கர் நிலம்தான் தேவை. விவசாயம் பாதிக்கும் என்று பரப்பப்படும் தகவல்கள் தவறு. எந்த விஞ்ஞானி அதை சொன்னார்? சமூக வலைத்தளங்களில் அவரவர் தெரிந்த தகவல்களை பரப்புகிறார்கள். இதை வைத்து முடிவெடுக்க முடியுமா?

    என்ன நோக்கத்துக்காக போராடுகிறார்கள்? பின்னணி யார்? என்பதை யோசியுங்கள். எந்த திட்டமும் வரக்கூடாது என்று சில அமைப்புகள் செயல்படுகின்றன. தமிழகத்தை அழிவுப்பாதைக்கு இழுக்கிறார்கள்.


    காமராஜர் நெய்வேலி நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கொண்டு வந்திருக்கா விட்டால் இன்று நிலைமை என்ன?

    மக்களிடம் கருத்து கேட்டு, சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுத்தான் நிறைவேற்றப்படும். மக்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகும் மத்திய அரசு வலுக்கட்டாயமாக திணித்தால் போராடட்டும். தவறு இல்லை.

    1967-ல் மாணவர்களை தூண்டிவிட்டு செய்த அதே துரோகத்தை இப்போதும் செய்கிறார்கள். எதற்கெடுத்தாலும் மாணவர்களையும், இளைஞர்களையும் கிள்ளு கீரையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். அதற்கு பலியாகி விடக்கூடாது.

    எந்த காரணம் கொண்டும் விவசாயம் பாதிக்க கூடாது. சுற்றுச்சூழல் பாதிக்ககூடாது. புதிய வசதிகள் செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினால் வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஆனால் எந்த திட்டத்தையும் வேண்டாம் என்று தடுப்பது நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×