search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளக்கம் கேட்டு கவர்னர் நோட்டீசு: சபாநாயகர் - சட்டசபை செயலாளர் ஆலோசனை
    X

    சட்டசபையில் அமளி குறித்து கவர்னர் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க சபாநாயகருடன், சட்டசபை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அதை தொடர்ந்து தி.மு.க உறுப்பினர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.

    இது குறித்து கவர்னர் வித்யாசாகர் ராவிடம் தி.மு.க மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க அணி சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இது குறித்து முழு விவரங்கள் தருமாறு சட்டசபை செயலாளர் ஜமாலுதீனுக்கு கவர்னர் நோட்டீசு அனுப்பினார்.

    அதில் “சட்டசபையில் கடந்த 18-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த முழுவிவரங்களை தெரிவிக்க வேண்டும். அன்றைய நிகழ்ச்சி நிரல் பட்டியல் விவரம், மற்றும் சபை நடவடிக்கைகளின் முழு வீடியோ பதிவு வழங்க வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

    எனவே, கவர்னருக்கு விளக்கம் அளிக்கும் பணியில் ஜமாலுதீன் ஈடுபட்டுள்ளார். அதற்காக இன்று காலை 8.45 மணிக்கு அவர் தலைமை செயலகம் வந்தார். பின்னர் சபாநாயகர் தனபால் அறைக்கு சென்றார். அங்கு அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும் உடன் இருந்தார்.

    அதை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையில் நடந்த சம்பவங்கள் குறித்த முழுவீடியோ தயார் செய்து கவர்னருக்கு அனுப்பப்படுகிறது.விளக்கம் கேட்டு கவர்னர் நோட்டீசு: சபாநாயகர் - சட்டசபை செயலாளர் ஆலோசனை

    சென்னை:

    சட்டசபையில் அமளி குறித்து கவர்னர் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க சபாநாயகருடன், சட்டசபை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அதை தொடர்ந்து தி.மு.க உறுப்பினர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.

    இது குறித்து கவர்னர் வித்யாசாகர் ராவிடம் தி.மு.க மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க அணி சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இது குறித்து முழு விவரங்கள் தருமாறு சட்டசபை செயலாளர் ஜமாலுதீனுக்கு கவர்னர் நோட்டீசு அனுப்பினார்.

    அதில் “சட்டசபையில் கடந்த 18-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த முழுவிவரங்களை தெரிவிக்க வேண்டும். அன்றைய நிகழ்ச்சி நிரல் பட்டியல் விவரம், மற்றும் சபை நடவடிக்கைகளின் முழு வீடியோ பதிவு வழங்க வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

    எனவே, கவர்னருக்கு விளக்கம் அளிக்கும் பணியில் ஜமாலுதீன் ஈடுபட்டுள்ளார். அதற்காக இன்று காலை 8.45 மணிக்கு அவர் தலைமை செயலகம் வந்தார். பின்னர் சபாநாயகர் தனபால் அறைக்கு சென்றார். அங்கு அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும் உடன் இருந்தார்.

    அதை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையில் நடந்த சம்பவங்கள் குறித்த முழுவீடியோ தயார் செய்து கவர்னருக்கு அனுப்பப்படுகிறது.
    Next Story
    ×