search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் நீட் தேர்வு நடத்துவதை தடுக்க சட்டம் கொண்டு வர தி.மு.க. கோரிக்கை
    X

    புதுவையில் நீட் தேர்வு நடத்துவதை தடுக்க சட்டம் கொண்டு வர தி.மு.க. கோரிக்கை

    புதுவை வடக்கு மாநில தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் நீட் தேர்வு நடத்துவதை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வடக்கு மாநில தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் ஆர்.பல ராமன் முன்னிலையில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை தாங்கினார்.

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு பேசினார் கள்.

    துணை அமைப்பாளர்கள் குமார், பெல்லாரி கலியபெருமாள், சுந்தரி அல்லிமுத்து, பொருளாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், லோகையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஆண்டு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது.

    நீட் நுழைவு தேர்வு புதுவை மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்வி பெறுகின்ற வாய்ப்பு அறவே தடுக்கப்படும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால் நீட் தேர்வுக்கு நிரந்தரமாக புதுவையில் விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட முன்வடிவை புதுவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அதன் பின் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும்.

    புதுவை அரசு விரைந்து செயல்பட்டு நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று பழைய சென்டாக் முறைப்படியே புதுவை மருத்துவ மாணவர்களை தேர்வு செய்து அவர்களை காத்திட ஆவன செய்ய வேண்டும்.

    இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×