search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி
    X

    தூத்துக்குடியில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி

    தூத்துக்குடியில் பன்றி காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள 20 பேர், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், தாளமுத்து நகரை சேர்ந்த ஒரு ஆணும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.

    இந்த நிலையில், தூத் துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, முத்தையாபுரம் சந்தோஷ் நகரை சேர்ந்த சந்தோசம் மனைவி பிரேமா (வயது60) சிகிச்சை பெற்று வந்தார்.

    அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததால், அவருடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப் பட்டது. சென்னையில் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட போது, அந்த பெண் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த பெண் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×