search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கிய வழக்கில் சேகர்ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி
    X

    புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கிய வழக்கில் சேகர்ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி

    புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கிய வழக்கில் சேகர்ரெட்டியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
    சென்னை:

    சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், ரூ.32 கோடி மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்ததாக குற்றம் சுமத்தி, சேகர்ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் சீனிவாசலு, பிரேம்குமார், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில், ஜாமீன் கேட்டு அனைவரும் சென்னை சி.பி.ஐ. சிறப்பு செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நிபந்தனை அடிப்படையில் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு மட்டும் ஜாமீன் வழங்கினார். சேகர் ரெட்டி உள்ளிட்ட மற்றவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×