search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலம் கனியும் வரை சசிகலா பொறுக்க மாட்டாரா? - ஓ.பன்னீர் செல்வம்
    X

    காலம் கனியும் வரை சசிகலா பொறுக்க மாட்டாரா? - ஓ.பன்னீர் செல்வம்

    மக்களிடம் சசிகலாவிற்கு எதிராக அலை உள்ளது. காலம் கனியும் வரை முதல்வராக பொறுப்பேற்க அவருக்கு பொறுமையில்லையா என ஓ.பன்னீர் செல்வம் கேள்வியெழுப்பியுள்ளார்.
    சென்னை:

    மக்களிடம் சசிகலாவிற்கு எதிராக அலை உள்ளது. காலம் கனியும் வரை முதல்வராக பொறுப்பேற்க அவருக்கு பொறுமையில்லையா என ஓ.பன்னீர் செல்வம் கேள்வியெழுப்பியுள்ளார்.

    தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கருத்துக்களை செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்து பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்து வருகிறார். அப்போது ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்துக்களாவது:-

    கடந்த மாதம் நடைபெற்ற ஒரு விழாவில் நானும், சசிகலாவும் கலந்து கொண்டோம். அப்போது, நான் பேசுவதற்கு முன்பாகவே அவர் எழுந்து சென்றுவிட்டார்கள். இதனால், அனைவரும் என்னிடம் கேள்வியெழுப்பினர். ஆனால், நான் அதற்க்கு எந்த வகையிலும் காரணமில்லை.

    அதுமட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் என்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்கள். இந்த நிகழ்வுகள் எல்லாம்  புரியாத புதிராக இருந்தது வந்தது. நான் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் தான்  இந்த பிரச்சனை எல்லாமே தொடங்கியது.

    இந்நேரம், ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர்கள் முதலமைச்சருக்கு எதிராக கருத்துக்களை கூறும் வகையில் பேட்டி கொடுத்திருப்பார்களா? , கடந்த சில நாட்களுக்கு முன்னர், எம்.எல்.ஏ கூட்டம் நடைபெறும் போது, என்னிடம் கட்டாயப்படுத்திதான் ராஜினாமா கடிதத்தை வாங்கினர். அப்போது கூட ,அம்மாவின் சமாதி செல்ல என்னை அனுமதிக்க வில்லை.

    எனது விசுவாசம் குறித்து ஜெயலலிதாவிற்கு தெரியும், கட்சியில் அடிமட்டத் தொண்டனாக இருந்த என்னை இந்த நிலைக்கு உயர்த்தியது அவர்தான். நான் விசுவாசமாக இல்லையென்றால் அவர் எனக்கு இத்தகைய  வாய்ப்புக்களை தந்திருக்கமாட்டார்.

    காலம் கனியும் போது சசிகலா முதல்வராக பதவி ஏற்கலாம், அதுவரை சசிகலா காத்திருப்பதில் என்ன தவறு உள்ளது. 4 வருடம் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் சசிகலாவுக்கு ஆதரவாக  இருக்கிறார்கள். ஆனால், மக்களை சந்தித்துதான் வாக்கு கேட்க வேண்டும் என அவர்கள் நினைவுடன் செயல்பட வேண்டும்.

    என கூறியுள்ளார்.
    Next Story
    ×