search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு
    X

    புழல் ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு

    பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 21-ந் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அன்று பூண்டி ஏரியில் நீர் மட்டம் 22.75 அடியாக பதிவாகி 546 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. கண்டலேறு அணையிலிருந்து தற்போது வினாடிக்கு 1700 கனஅடி விதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு இன்று காலை வினாடிக்கு 421 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த 28-ந்தேதி பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை மேலும் 100 கனஅடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது. அதாவது வினாடிக்கு 300 கனஅடிவிதம் புழல் ஏரிக்கு திறக்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 24.30 அடியாக பதிவாகியது. 749 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கடந்த 21-ந்தேதி முதல் இன்று காலை வரை 12 நாட்களில் பூண்டி ஏரியில் நீர் மட்டம் 1.55 அடி உயர்ந் துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
    Next Story
    ×