search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5-வது நாளாக இன்று ரெயில் போக்குவரத்து முடங்கியது: மேலும் 21 ரெயில்கள் ரத்து
    X

    5-வது நாளாக இன்று ரெயில் போக்குவரத்து முடங்கியது: மேலும் 21 ரெயில்கள் ரத்து

    எழும்பூரில் ரெயில் போக்குவரத்து முடக்கப்பட்டதால் தென் மாவட்ட பகுதிகளுக்கு ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 5-வது நாளாக ரெயில் சேவை பாதித்தது.
    சென்னை:

    ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தன்னிச்சையாக போராட்டம் வெடித்தது. மாணவர்களும், இளைஞர்களும் வீதிகளுக்கு வந்து போராடி வருகிறார்கள்.

    மதுரை, சேலம் உள்ளிட்ட சில இடங்களில் ரெயில்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

    ரெயில்களுக்கு முன்பாக தண்டவாளத்தில் இரவு பகலாக படுத்து கிடந்து நடத்தி வரும் இந்த எழுச்சி போராட்டத்தால் ரெயில் போக்குவரத்து கடுமையாக முடங்கியது.

    தென் மாவட்டங்களையும் வட மாவட்டங்களை இணைக்கும் பாலமாக மதுரை ஜங்சன் நிலையம் உள்ளது. மதுரையில் சிறை பிடிக்கப்பட்ட ரெயில் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை. இதன் காரணமாக இன்று 5-வது நாளாக ரெயில் சேவை பாதித்தது.

    சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருச்செந்தூர், திருச்சி, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு 4 நாட்களாக ரெயில்கள் இயக்கப்படவில்லை.

    அதுபோல அங்கிருந்தும் எழும்பூருக்கு ரெயில் போக்குவரத்து முடக்கப்பட்டதால் தென் மாவட்ட பகுதிகளுக்கு ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர திருச்சி, மதுரை, கோவை, சேலம், பெங்களூர், விழுப்புரம், உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பாசஞ்சர் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.

    இன்று (திங்கட்கிழமை) 23 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 16 ரெயில்கள் ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

    1. திருச்சி- ராமேஸ்வரம்- திருச்சி பாசஞ்சர், 2. விருதுநகர் - காரைக்குடி, 3. காரைக்குடி - திருச்சி, 4. காரைக்குடி - திருச்சி, 5. திண்டுக்கல்- திருச்சி, 6. திண்டுக்கல் - மதுரை, 7. மதுரை - செங்கோட்டை- மதுரை, 8. காரைக்கால்- பெங்களூர், 9. திருச்சி- மானாமதுரை, 10. மானாமதுரை - திருச்சி, 11. திருச்சி - பாலக்காடு, 12. பாலக்காடு - பொள்ளாச்சி, 13. எழும்பூர்- தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ், 14. சென்ட்ரல்- மதுரை தூரந்தோ எக்ஸ்பிரஸ், 15. பொள்ளாச்சி- பாலக்காடு, 16. பாலக்காடு- திருச்சி, 17. திருச்சி- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், 18, திருநெல்வேலி- திருச்சி எக்ஸ்பிரஸ், 19. செங்கல்பட்டு- திருநெல்வேலி சிறப்பு கட்டண ரெயில், 20. எழும்பூர்- கொச்சுவேலி சிறப்பு கட்டண ரெயில், 21. தூத்துக்குடி- எழும்பூர் லிங்க் எக்ஸ்பிரஸ்.

    1. ராமேஸ்வரம்- மதுரை- ராமேஸ்வரம் பாசஞ்சர் ரெயில் மானாமதுரை - மதுரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

    2. மதுரை- விழுப்புரம் பாசஞ்சர் ரெயில் மதுரை - திண்டுக்கல் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    3. மதுரை-பழனி பாசஞ்சர் ரெயில் மதுரை- திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டது.

    4. திருநெல்வேலி- மயிலாடுதுறை, ஈரோடு பாசஞ்சர் ரெயில் திருநெல்வேலி - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

    5. நாகர்கோவில்- கோயம்புத்தூர் பாசஞ்சர் ரெயில் நாகர்கோவில் திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

    6. கோயம்புத்தூர்- நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில் திண்டுக்கல்- நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

    7. எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி-குருவாயூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து எழும்பூருக்கு பாசஞ்சர் ரெயிலாக (குருவாயூர் ரெயில் இயக்கப்படும் அதே நேரத்தில்) இயக்கப்படும்.

    8. பெங்களூர்- நாகர்கோவில் (17235) எக்ஸ்பிரஸ் திண்டுக்கல்- நாகர்கோவில் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    9. நாகர்கோவில்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஒரு பகுதியாக நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

    10. தாதர்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல்-திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் மாலை 6.50 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து தாதருக்கு புறப்படுகிறது.

    11. திருநெல்வேலி- தாதர் எக்ஸ்பிரஸ் பகுதியாக திருநெல்வேலி- திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

    12. மைசூர்- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல்- தூத்துக்குடி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் திண்டுக்கல்லில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு மைசூருக்கு புறப்படுகிறது.

    13. தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் பகுதியாக தூத்துக்குடி-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

    14. காரைக்குடி-எழும்பூர் பல்லவன் பகுதியாக காரைக்குடி-திருச்சி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

    15. மதுரை-எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் மதுரை-திண்டுக்கல் இடையே ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    16. திருநெல்வேலி- வைஷ்ணவா தேவிகத்ரா எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி- ஈரோடு இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் போராட்டக்காரர்கள் இன்று வெளியேற்றப்பட்டதால் ரெயில் போக்குவரத்து சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து இன்று மாலையில் தென் மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×