search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் மாவட்ட ரெயில்கள் இன்றும் ரத்து - சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
    X

    தென் மாவட்ட ரெயில்கள் இன்றும் ரத்து - சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தால் தென் மாவட்டத்திற்கு இயக்கப்பட இருந்த ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.
    சென்னை:

    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தால் தென் மாவட்டத்திற்கு இயக்கப்பட இருந்த ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.

    ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மத்திய அரசை கண்டிக்கும் வகையில் மதுரையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட இருந்த பெரும்பாலான ரெயில்கள் முழுமையாகவும், சில ரெயில்கள் பகுதி தூரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட்டு வருகிறது.

    தென் மாவட்ட ரெயில்களான செந்தூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    இதேபோல் இன்று இயக்கப்பட இருந்த, சென்னை எழும்பூர்-ஈரோடு சிறப்பு கட்டண ரெயில், சென்னை சென்டிரல்-ஐதராபாத் சிறப்பு கட்டண ரெயில், சென்னை சென்டிரல்-மதுரை சிறப்பு கட்டண ரெயில் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    பாண்டியன் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், நாகர் கோவில் எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் சென்னையில் இருந்து பகுதி தூரமாக திண்டுக்கல் வரை இயக்கப்பட்டன

    சேலம் எக்ஸ்பிரஸ், மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

    மேலும் அரக்கோணம்-பெங்களூரு, நாகர்கோவில்-கோவை இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயிலும் திருச்சி-நெல்லை எக்ஸ்பிரஸ், காரைக்கால்- பெங்களூரு எக்ஸ்பிரஸ், திருச்சி-ராமேசுவரம் பயணிகள் ரெயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன.

    நெல்லையில் இருந்து எழும்பூருக்கு வரவேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் நேற்று நாகர்கோவில், திருவனந்தபுரம், எர்ணாகுளம், போதனூர், ஈரோடு, காட்பாடி வழியாக சென்னை கடற்கரைக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. இதேபோன்று புதுச்சேரி-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ், சேலம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ், மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

    மேலும் மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர்- ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் இருமார்க்கமாகவும், பல்லவன் எக்ஸ்பிரஸ் இருமார்க்கமாகவும், மதுரை- லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ், அனந்தப்புரி எக்ஸ்பிரஸ், மைசூரு எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டன. 
    Next Story
    ×