search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் கடையடைப்பு
    X

    வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் கடையடைப்பு

    வேலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் 3-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
    வேலூர்:

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் எழுச்சியுடன் இரவு, பகல் பாராமல் 3-வது நாளாக தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் போராட்ட களத்தில் தரையில் அமர்ந்து தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். 3-வது நாள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் வணிகர் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு நடந்தது.

    வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம், காட்பாடி என வேலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

    தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. தனியார் பள்ளி, கல்லூரிகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று விடுமுறை அறிவித்து மூடப்பட்டன. ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

    இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மாணவ, மாணவிகள், இளைஞர்கள் போராட்டம் 3-வது நாளாக நடக்கிறது.

    திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யாறு, போளூர், செங்கம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டள்ளன. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
    Next Story
    ×