search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் நடத்திய ரெயில் மறியல் போராட்டம்
    X
    முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் நடத்திய ரெயில் மறியல் போராட்டம்

    விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் ரெயில் மறியல்

    விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
    விழுப்புரம்:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரத்தில் நகர தி.மு.க.அலுவலகம் முன்பு இன்று காலை தி.மு.க.வினர் திரண்டனர். அங்கிருந்து அவர்கள் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.செயலாளருமான பொன்முடி தலைமையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ரெயில் நிலையம் அருகே வந்ததும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் போலீசார் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் சென்றனர்.

    அப்போது அங்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய ரெயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ராதாமணி எம்.எல்.ஏ. தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜெயச்சந்திரன், டாக்டர் முத்தையன், மைதிலி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.புஷ்பராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

    நகர அவைத்தலைவர் சக்கரை, துணைச் செய லாளர் புருஷோத்தம்மன், வக்கீல் சோமு, மாவட்ட பிரதிநிதி மந்தகரை சக்கரபாணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், துணை அமைப்பாளர் தயா இளந்திரையன், மாவட்ட தொண்டர் படை அமைப்பாளர் கபாலி, துணை அமைப்பாளர்கள் அமர்ஜி, பாலு, மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி செயலாளர் கல்பர்ட் ராஜா, மாவட்ட எஸ்.சி. எஸ்.டி.பிரிவு துணைத் தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, வேம்பிரவி, முருகன், சிந்தாமணி, ஜெயம்ரவி, மீனவரணி ராஜா, மாணவரணி செயலாளர் வினோத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×