search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு: விக்கிரமராஜா தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு: விக்கிரமராஜா தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

    சென்னை:

    ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர். மளிகை, காய்கறி, கடைகள், ஓட்டல்கள், ஜவுளி, நகைகடைகள் உள்பட மொத்த சில்லறை நிறுவனங்கள், அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பில் இணைந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக சங்கங்கள் உள்ளிட்ட 21 லட்சம் வணிகர்கள் இதில் முழுமையாக பங்கேற்றனர். 21 லட்சம் வணிக கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் மோகன், மண்டலதலைவர் சதக்கத்துல்லா, மாவட்டத் தலைவர்கள் கே. ஜோதிலிங்கம், என்.டி.மோகன், சாமுவேல், ரவி, ஜெய்பால், ஆதி குருசாமி, அமல்ராஜ், மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், கூடுதல் செயலாளர் ஜோசப், வி.பி.மணி, ஆர்.எம்.பழனியப்பன், சுப்பிரமணியன், நடராஜன், ஐ. பால் ஆசிர், பீமராஜன், அசரப், கொரட்டுர் ராமச்சந்திரன், தேசிகன், சின்னவன், வினோத்பாபு, நித்யானந்தன், கிருஷ்ணன், ராமச்சந்திரன், மாரியப்பன், சிவதாஸ், ராபர்ட், நந்தகோபால் முருகன், பிலால், பாலன்.

    அம்பத்தூர் ஹாஜி முகம்மது, திருவான்மியூர் செந்தில்குமார், மார்க்கெட் சிவா, ஆவடி வேலுசாமி, பழம்பொருள் அணி ஜெயகுமார், பூவை ஜெயக்குமார்.

    ஆவடி பெருநகராட்சி அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.கே.எம். துரைராஜன், பொதுச்செயலாளர் அய்யார்பவன் அய்யாத்துரை,

    பொருளாளர் மனோகரன் உள்பட ஆயிரக்கணக்கான வணிகர்கள் பங்கேற்றனர்.

    ஆலந்தூர் வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன் நாடார் தலைமையில் சுமார் 2 ஆயிரம் பேர் ஆலந்தூர் வியாபாரிகள் சங்க அலுவலகம் முன்பிருந்து 2 மாடுகளுடன் ஊர்வலமாக வீதி வீதியாக சென்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    இதில் பொருளாளர் ராமசாமி, காப்பாளர் அமானுல்லாகான், துணை செயலாளர் வடிவேல், சுப்பிரமணியன், சத்தியசீலன், ஆலோசகர் ஸ்ரீதர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×