search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் அருகே கோவிலுக்குள் புகுந்து ஐம்பொன்விநாயகர் சிலை கொள்ளை
    X

    திருப்பத்தூர் அருகே கோவிலுக்குள் புகுந்து ஐம்பொன்விநாயகர் சிலை கொள்ளை

    திருப்பத்தூர் அருகே கோவிலுக்குள் புகுந்து ரூ. 4½ லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் விநாயகர் சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள குரும்பேரியில் சென்ன கேசவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு மூலஸ்தானத்தில் ஐம்பொன்னாலான விநாயகர் சிலை இருந்தது.

    இந்த சிலை 3 அடி உயரமும், 7½ டன் எடை கொண்டதுமாகும். இதன் மதிப்பு ரூ. 4½ லட்சம். நேற்று கோவிலில் பூஜை முடிந்ததும் கோவில் பூட்டப்பட்டது.

    இன்று காலை வந்து பார்த்தபோது கோவில் மூலஸ்தானத்தில் இருந்த ஐம்பொன் விநாயகர் சிலையை காணவில்லை. கோவிலின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துள்ள மர்மநபர்கள் சிலையை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் டி.எஸ்.பி. பன்னீர் செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்படடது. கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதே ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அந்த கோவிலை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    உண்டியலில் ரூ. 50 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×