search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சென்னை:

    திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் கே.என். நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் கட்சியினர் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

    பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வழக்கமாக அலங்காநல்லூரில் பங்கேற்கும் காளைகளுடன் ஆர்ப்பாட்டத்திற்கு பலர் திரண்டு வந்தனர்.

    புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் சிவசங்கர் தலைமை தாங்கினார். இதில் ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்பினர் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டங்களில் பங்கேற்றவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்காத மத்திய அரசை கண்டித்தும், பீட்டா அமைப்பை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சை பனகல் பில்டிங் எதிரில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ். பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் உபயத்துல்லா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவாரூர், நாகையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    விழுப்புரத்தில் மத்திய தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலெக்டர் அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ. வுமான பொன்முடி தலைமை தாங்கினார்.கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க., நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை ஜோதிபுரம் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல்வகாப் தலைமை தாங்கினர். இதில் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான‌ மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்பட ஏராள மான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரோடு காமராஜர் கல்லூரி அருகில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். கீதா ஜீவன் எம்.எல்.ஏ., உள்பட ஏராளமானேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய 2 இடங்களில் இன்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மார்த்தாண்டம் தபால் நிலையம் முன்பு மனோதங் கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப் பாட்டம் நடந்தது.

    மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒத்தக்கடையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

    மதுரை மாநகர் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணாநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் வேலுச்சாமி, தளபதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மதுரை அவனியாபுரத்திலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக அவனியாபுரத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பில் சிவகங்கை பஸ்நிலையம் எதிரே உள்ள அரசு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    விருதுநகர் தேசபந்து திடல் தபால் அலுவலகம் முன்பு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு, தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். தி.மு.க.வினர் பங்கேற்று மத்திய மாநில அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர்.

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் அரண்மனை முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சுப.த. திவாகரன் தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×