search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி தாமதமாக தொடங்கும்
    X

    சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி தாமதமாக தொடங்கும்

    தீவுத்திடலில் பொருட்காட்சி தொடங்குவது சற்று தாமதமாகுமே தவிர ரத்து செய்யப்படாது. தீவுத்திடலில் பொருட்காட்சி வழக்கம் போல் நடைபெறும் என்று பொருட்காட்சி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் அரசு தொழில் பொருட்காட்சி வழக்கமாக டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கப்படும்.

    2 மாதம் வரை நடைபெறும் இந்த பொருட்காட்சியை பார்க்க சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் அதிகளவு வருவார்கள்.

    பொழுது போக்கு அம்சங்கள், விளையாட்டு சாதனங்கள், மத்திய, மாநில அரசுகளின் துறை செயல் விளக்கங்கள் இதில் இடம் பெறும். கடந்த ஆண்டு பொருட்காட்சி ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.

    டிசம்பர் மாதம் முழுவதும் மழை வெள்ளம் சென்னை மற்றும் புறநகர் பகுதியை சூழ்ந்து இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

    இயற்கை சீற்றம் இந்த ஆண்டும் சென்னையை விடவில்லை. வார்தா புயல் தாக்கத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மின்சாரம், குடிநீர் இல்லாமல் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

    ஒரு வாரத்திற்கு பிறகு இயல்பு நிலை தற்போது படிப்படியாக திரும்பி வருகிறது.

    புயல் பாதிப்பால் அரசு பொருட்காட்சி தொடக்கப் பணிகள் பாதிக்கப்பட்டன. ஸ்டால்கள் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. சூறாவளி புயலால் தீவுத்திடலில் சீர் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பொருட்காட்சி இந்த ஆண்டு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஆனால் தீவுத் திடலில் பொருட்காட்சி வழக்கம் போல் நடைபெறும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று பொருட்காட்சி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    அரசு பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. முகப்பு தோற்றம், அரங்குகள், ஸ்டால்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    பொருட்காட்சி தொடங்குவது சற்று தாமதமாகுமே தவிர ரத்து செய்யப்படாது. தீவுத்திடலில் சீரமைக்கும் பணி நடந்து வருகின்றன. புயலால் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்குவது தாமதமானது என்றார்.

    Next Story
    ×