search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்தா புயல் 12-ந் தேதி கரையை கடக்கும் போது வலுவிழக்க வாய்ப்பு
    X

    வார்தா புயல் 12-ந் தேதி கரையை கடக்கும் போது வலுவிழக்க வாய்ப்பு

    வார்தா புயல் 12-ந் தேதி மாலை நெல்லூருக்கும் காக்கி நாடாவிற்கும் இடையே கரையை கடக்கும். வார்தா புயல் கரையை கடக்கும் முன் சற்று வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறி உள்ளார்.
    சென்னை:

    வங்க கடலில் உருவாகிய வார்தா புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:-

    தென்கிழக்கு வங்க கடலில் பகுதியில் நிலை கொண்டிருந்த வார்தா புயல் இன்று காலை (9-ந் தேதி) விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 990 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 2 நாட்களாக மணிக்கு 2 கி.மீ. தூரத்தில் மட்டுமே மெதுவாக நகர்ந்து வந்துள்ளது.

    இந்த புயல் வடமேற்கு திசையில் நாளை (10-ந் தேதி) மற்றும் 11-ந் தேதிகளில் நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த புயல் 12-ந் தேதி மாலை நெல்லூருக்கும் காக்கி நாடாவிற்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கரையை கடக்கும் முன் இந்த புயல் சற்று வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 24 மணி நேரத்தில் ராஜபாளையத்தில் 5 செ.மீ. மழையும், தூத்துக்குடியில் 4 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    Next Story
    ×