search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு: புயலாக மாற வாய்ப்பு
    X

    அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு: புயலாக மாற வாய்ப்பு

    அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயலாக மாற வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியுள்ளார்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கு 1180 கிலோ மீட்டர் தூரத்தில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகி உள்ளது.

    அது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் 24 மணி நேரத்தில் அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    இது வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த புயலின் நிலை, நகரும் பாதை தீவிரமாக கண் காணிக்கப்படுகிறது.

    மேலும் தென் மேற்கு வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும். சென்னையில் ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×