search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் டைரி குறிப்பு
    X

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் டைரி குறிப்பு

    தமிழ்நாட்டின் தலைசிறந்த பெண் முதலமைச்சராக திகழ்ந்த ஜெயலலிதாவின் அரசியல்சார்ந்த பொதுவாழ்வில் நிகழ்ந்த சில முக்கிய குறிப்புகளை இங்கே காணலாம்.
    சென்னை:

    1991-சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அபார வெற்றி பெற்றதையடுத்து 24-6-1991 அன்று தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறை பதவி ஏற்றார்.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டதாக தி.மு.க. செய்த தீவிரப் பிரசாரத்தின் விளைவாக 2006-சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தார். 1991-1996-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 66.65 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அந்நாள் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதே குற்றச்சாட்டின்கீழ், 11-7-1996 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜெயலலிதாவை கைது செய்தனர்.

    1997-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மேலும் சிலர் மீதான 47 ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தி.மு.க. அரசின் சார்பில் மூன்று சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் மேலும் இருவர்மீது தனியாக சொத்து குவிப்பு வழக்குகளும் தொடரப்பட்டன. இவ்வழக்கில் 4-6-1997 அன்று அரசின் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    1999-ம் ஆண்டு ஊழல் வழக்குகளில் ஒன்றான நிலக்கரி இறக்குமதி வழக்கில் இருந்து கோர்ட் விடுவித்தது.
     பிளசண்ட் ஸ்டே என்ற ஓட்டல் கட்டுவதற்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் 2-2-2000 அன்று குற்றவாளி அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அரசுக்கு சொந்தமான ’டான்சி’ நிலத்தை வாங்கிய வழக்கில் 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    மேற்படி வழக்குகளில் குற்றவாளி என்ற தீர்ப்பு வெளியான நிலையிலும் 2011-சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றது. 14-5-2011 அன்று தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இரண்டாவது முறை பதவி ஏற்றுக் கொண்டார்.

    டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டதும், முதலமைச்சராக பதவி ஏற்றதும் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததையடுத்து, 21-9-2011 அன்று அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டார்.

    பிளசன்ட் ஸ்டே மற்றும் டான்சி வழக்குகளில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்து சென்னை ஐகோர்ட் 4-12-2011 அன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து, 21-2-2002 அன்று ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா, வெற்றிபெற்று, 2-3-2002 அன்று மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

    தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா மீது நடைபெற்றுவந்த சொத்து குவிப்பு வழக்கை பெங்களூர் நீதிமன்றத்துக்கு மாற்றி, 18-11-2003 அன்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 24-11-2003 அன்று டான்சி வழக்கில் ஜெயலலிதாவை சென்னை ஐகோர்ட் விடுவித்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

    ஸ்பிக் பங்குகள் தொடர்பான வழக்கில் இருந்து 23-1-2004 அன்று விடுவிப்பு. 2006-சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது.

    2011-சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி, 16-5-2011 அன்று மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.

    பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் 2011- அக்டோபர், நவம்பர் மாதங்களில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான 1,339 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    இவ்வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் குற்றவாளி என சிறப்பு கோர்ட் நீதிபதி மைக்கேல் குன்ஹா கடந்த 27-9-2014 அன்று தீர்ப்பளித்தார். ஜெயலலிதா உள்பட நான்கு பேருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்ற மூவருக்கும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, பர்ப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, முதலமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.

    21 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் 18-10-2014 அன்று சுப்ரீம் கோர்ட் அவரை ஜாமினில் விடுவித்தது. 11--5-2015 அன்று சிறப்பு கோர்ட் நீதிபதி முன்னர் விதித்த நான்காண்டு சிறை தண்டனை என்ற தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் இவ்வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பளித்தது.

    சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா 23-5-2015 அன்று ஐந்தாவது முறை முதலமைச்சராக பதவி ஏற்றார்.

    2016-சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து. தொடர்ந்து இருமுறை பதவி ஏற்ற கட்சி என்ற பெருமையை மீண்டும் அ.தி.மு.க.வுக்கு ஏற்படுத்திய ஜெயலலிதா, ஆறாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

    22-9-2016 அன்றிரவு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் வெளியான அறிக்கைகளில் ஜெயலலிதா உடல்நலம் தேறிவருவதாகவும், சீராக இருப்பதாகவும், சிகிச்சைகளுக்கு நல்லமுறையிலும், தைரியமாகவும் அவர் ஒத்துழைப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

    ஜெயலலிதா பூரணமாக குணமடைந்து விட்டார் என அவருக்கு சிகிச்சை அளித்துவந்த எய்ம்ஸ் டாக்டர்கள் குழு தெரிவித்ததாக அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    கடந்த 4-ம் தேதி மாலை திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு உயிர்காக்கும் நவீன உபகரணங்களின் மூலமாக செயற்கை சுவாசம், மற்றும் இதய துடிப்பு புறத்தூண்டலின் ஊடாக நடைபெற்று வந்தது.

    அப்பல்லோ மருத்துவர்கள் குழு மற்றும் டெல்லியில் இருந்து வந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் அவரது உயிரை காப்பாற்ற மேற்கொண்டிருந்த தீவிர முயற்சிகள் பலனின்றி 5-12-2016 (நேற்று) பின்னிரவு அவர் காலமானார்.
    Next Story
    ×