search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழில் இ-புக் வாசிக்கலாம்: அமேசான் கிண்டில் அறிவிப்பு
    X

    தமிழில் இ-புக் வாசிக்கலாம்: அமேசான் கிண்டில் அறிவிப்பு

    டேப்லெட் மற்றும் கிண்டில் ஆப் பயனர்கள் இனி தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இ புத்தகங்களை வாசிக்க முடியும்.
    சென்னை:

    தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இனி இ புத்தகங்களை வாசிக்க முடியும் என அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான புத்தகங்களை தனது கிண்டில் ஸ்டோரில் இணைத்திருப்பதாக கூறியுள்ளது. அதிகம் விற்பனையாகும், பல்வேறு கதையம்சம் கொண்ட புத்தகங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    கிண்டில் டேப்லெட் வகைகளோடு இல்லாமல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் கிண்டில் ஆப்ஸ்களையும் மேம்படுத்தி இருப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது. இதனால் கிண்டில் ஆப் பயனர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்திய மொழிகளில் பல்வேறு புத்தகங்களை வாசிக்க முடியும். அமேசானின் போட்டி நிறுவனமான கூகுள் பிளே புக்ஸ் சேவையும் பல்வேறு இந்திய மொழிகளில் புத்தகங்களை வழங்கி வருகிறது.

    'ஐந்து இந்திய மொழியில் புத்தகங்களை வழங்குவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளோம். புதிய சேவைகளைப் பெற பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் கருவி அல்லது கிண்டில் ரீடர் இருந்தாலே போதுமானது. இந்திய வாசகர்களுக்கு அதிக தேர்வு முறைகளை வழங்குவதன் ஒரு அங்கமாக ஐந்து மொழிகளை கூடுதலாக இணைத்திருக்கிறோம்,' என கிண்டில் இந்தியா மேலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×