search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த போது எடுத்த படம்
    X
    ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த போது எடுத்த படம்

    கும்பகோணத்தில் ஜவுளிக்கடையில் தீ விபத்து: ரெடிமேடு ஆடைகள் எரிந்து சேதம்

    கும்பகோணத்தில் ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. 2 வண்டிகளில் 23 தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    சுவாமிமலை:

    கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடையில் முதல் தளத்தில் ஆண்கள் ரெடிமேடு பிரிவு செயல்பட்டு வருகிறது.

    இந்த தளத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பரவத் தொடங்கியது. இதனை கடை காவலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் கும்பகோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். நிலைய அலுவலர் செல்லத்துரை தலைமையில் 2 வண்டிகளில் 23 தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 8.30 மணி வரை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே தீயை கட்டுப்படுத்த முடிந்தது. இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரெடிமேடு ஆடைகள் எரிந்து சேதம் அடைந்தது.

    சேத மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. ஜவுளிக்கடை உரிமையாளர் மதுரையில் உள்ளார். அவர் வந்த பின்னர் சேதம் குறித்த முழு விவரம் தெரிய வரும்.

    ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    Next Story
    ×