search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்ககூடாது: கலெக்டர் தகவல்
    X

    அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்ககூடாது: கலெக்டர் தகவல்

    உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி இரவு 10 மணி முதல் 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்ககூடாது என்று கலெக்டர் சங்கர் கூறினார்.

    ஊட்டி:

    நீலகிரி கலெக்டர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி இரவு 10 மணி முதல் 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்ககூடாது.

    திறந்த வெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசு வெடிக்கலாம். குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் வாண வெடிகளையும், ராக்கெட் வெடிகளையும் மிகுந்த சத்தம் எழுப்பும் வெடிகளை வெடிப்பதை தவிர்க்கவும்.

    குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள். பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

    ஆஸ்பத்திரி, பள்ளி, நீதிமன்றங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வெடிகளை வெடிக்கக்கூடாது. வெடிகளை வெடிக்கும்போது காலணி அணிந்து கொள்வது நல்லது. வனப்பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உச்ச நீதிமன்ற விதிமுறைகளை கடைபிடிக்காமல் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளை வாங்ககூடாது.

    விற்பனையாளர்கள் ஒவ்வொரு பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப் பொருட்கள் அவற்றின் அளவுகள் மற்றும் அதனை வெடிக்கும்போது ஏற்படுத்தும் ஒலி மாசு பற்றிய தகவல் அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும்.

    அதிகபட்ச ஒலி அளவான 125 டெசிபலுக்கு மேல் எந்த ஒரு பட்டாசும் விற்பனை செய்யக்கூடாது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×