search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் இடிப்பு
    X

    கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் இடிப்பு

    பெரும் திட்ட வளாகம் அமைப்பதற்காக கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் இடிக்கப்பட்டது.
    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 22 கிரவுண்ட் பரப்பளவுள்ள சுமார் ரூ.132 கோடி மதிப்புள்ள இடத்தில் 1992-ம் ஆண்டு சேமியர்ஸ் சாலையில் கட்டப்பட்ட வணிக வளாக கட்டிடம், கட்டுமானப் பணி முடிவுறாத நிலையில், குத்தகை பிரச்சினை எழுந்ததால், எந்தவித பயன்பாடும் இல்லாத நிலையில் இருந்தது. பின்னர், இந்த வணிக வளாக கட்டிடத்தை கோவிலுக்கு வருவாய் வரத்தக்க வகையில் பயன்படுத்துவது குறித்து கோவில் நிர்வாகம் பரிசீலித்தது.

    மேலும், கோவிலுக்கு வருமானம் வரும் வகையில் நவீன மாற்றங்கள் செய்து பயன்படுத்துவது குறித்து கட்டிட வல்லுனர்கள் கருத்துரு பெற அரசு அறிவுரை வழங்கியதை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக கட்டிட வடிவமைப்பு பொறியாளர்கள் ஆய்வு செய்து, உரிய பரிசோதனைகள் செய்த பின்னர், வணிக வளாக கட்டிடம் உபயோகிக்க இயலாத நிலையில் உள்ளதாகவும், கட்டிடத்தை இடித்துவிடவும் பரிந்துரை செய்து சான்றிதழ் அளித்திருந்தனர்.

    இந்த பரிந்துரையின் பேரில் எதிர்காலத்தில் கோவிலுக்கு வருமானம் வரும் வகையில் பெரும் திட்ட வளாகம் அமைப்பதற்காக இந்த கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்த கட்டிடம் கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினால் இடிக்கும் பணி நேற்று முழுமையாக முடிந்தது.

    மேற்கண்ட தகவல் கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×