search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் நடந்த சாலையோர ஸ்கேட்டிங் போட்டியில் 140 மாணவ–மாணவிகள் பங்கேற்பு
    X

    பெரம்பலூரில் நடந்த சாலையோர ஸ்கேட்டிங் போட்டியில் 140 மாணவ–மாணவிகள் பங்கேற்பு

    பெரம்பலூரில் நடந்த சாலையோர ஸ்கேட்டிங் போட்டியில் 140 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.
    தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மற்றும் இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில், மாநில அளவிலான ஸ்கேட்டிங் வீரர்–வீராங்கனைகள் தேர்வு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. 11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் என 4 பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டிகளில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பள்ளி மாணவ–மாணவிகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான நேற்று முன்தினம் மாணவர்களுக்கான இன்லைன் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றன.

    2–வது நாளான நேற்று காலை மாணவ–மாணவிகளுக்கு தனித்தனியே சாலையோர ஸ்கேட்டிங் போட்டிகள், துறைமங்கலத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் எதிரே உள்ள சாலையில் நடந்தன.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் முன்னிலையில், மோட்டார் வாகன ஆய்வாளர் மனோகரன், போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் மொத்தம் 140 மாணவ–மாணவிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

    இன்லைன் மற்றும் சாலையோர ஸ்கேட்டிங் போட்டிகளில் இருதினங்களிலும் விளையாடிய மாணவர்கள் அதிக புள்ளிகள் அடிப்படையில் 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல், மாணவிகளுக்கான இன்லைன் ஸ்கேட்டிங் போட்டி இன்று (திங்கட்கிழமை) காலை நடந்தது.
    Next Story
    ×