search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் தீபாவளி பட்டாசு கடை வைக்க 870 பேருக்கு அனுமதி
    X

    சென்னையில் தீபாவளி பட்டாசு கடை வைக்க 870 பேருக்கு அனுமதி

    சென்னையில் தீபாவளி பட்டாசு கடை வைக்க 870 பேருக்கு உரிமம் பெறுவதற்குரிய தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 130 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன.
    சென்னை:

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி ஜவுளி கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. தீபாவளி தற்காலிக பட்டாசு கடைகளும் திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடை திறக்க கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    பட்டாசு கடை விபத்துகளை தடுக்க தீயணைப்புத்துறை பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன.

    தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான் அந்தந்த மாநகர காவல்துறை அல்லது வருவாய்த்துறையிடம் இருந்து உரிமம் பெற முடியும்.

    பட்டாசு கடைகள் வைப்பதற்கான விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகளை நேரடியாக ஆய்வு செய்த பிறகே தடையில்லா சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    தீயணைப்பு துறை நிர்வாகம் உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றினை கட்டாயம் பெற வேண்டும்.

    சென்னையில் இந்த ஆண்டு பட்டாசு கடை வைப்பதற்கு 1006 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 870 பேருக்கு உரிமம் பெறுவதற்குரிய தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 130 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன.

    6 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பட்டாசு கடை வைப்பதற்குரிய விதிமுறைகள் இந்த ஆண்டு கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்து கொள்கிறோம். தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரித்து விட்டோம். இதனால் விண்ணப்பங்கள் குறைவாக வந்துள்ளன.

    இப்போது 130 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதில் தகுதியானவர்களுக்கு ஓரிரு நாள்களில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×