search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
    X

    பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

    பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து திருவாரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    திருவாரூர்:

    2013-ம் ஆண்டு  திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தை சேர்ந்த கமலா என்ற பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மணிவேலை என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமரேசன், குற்றவாளி மணிவேலுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    முன்னதாக,  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள, வடபாதிமங்கலம், ராமநாதபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சாமியப்பன். இவரது மகள் கமலா, 30. வடபாதிமங்கலத்திலுள்ள மருந்து கடையில் வேலை செய்து வந்தார். இவர் 2013 ஆண்டு 23ம் தேதி இரவு, 7 மணிக்கு வேலை முடிந்து, தனது சைக்கிளில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அதே ஊரை சேர்ந்த பூமிநாதன் மகன் மணிவேல், 21, என்பவர், தனது டூவீலர் மோதியதால், கமலா இறந்துவிட்டதாக கூறி, வடபாதிமங்கலம் போலீஸில் சரணடைந்தார்.

    இந்நிலையில் கமலா சாவில் மர்மம் உள்ளதாக, வடபாதிமங்கலம் போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் விசாரணையில், மணிவேல் தான், கமலாவை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று விட்டு, விபத்தில் இறந்தது போல நாடகமாடியது தெரியவந்தது. மேலும் மணிவேல் கொடுத்த வாக்குமூலத்தில், "கமலா எனக்கு அத்தை முறை ஆக வேண்டும். அவரை அடைய நினைத்தேன். அவரை பின்தொடர்ந்து சென்று, ஆண்டிவாய்க்கால் பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தேன். டூவீலர் வந்ததால், சத்தம் போடாமல் இருக்க கமலாவின் முகத்தை வயல் சேற்றுக்குள் அமுக்கினேன். இதில் கமலா மூச்சுத்திணறி இறந்துவிட்டார்' என, கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×