search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    90 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு நாளை சிறப்பு மருத்துவ கவுன்சிலிங்
    X

    90 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு நாளை சிறப்பு மருத்துவ கவுன்சிலிங்

    அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 81 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்பட 90 இடங்களுக்கு நாளை சிறப்பு மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது.
    சென்னை:

    அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 81 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்பட 90 இடங்களுக்கு நாளை சிறப்பு மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இதுகுறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை கூடுதல் இயக்குனர் டாக்டர் செல்வராஜன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 90 எம்.பி.பி.எஸ். இடங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதில் 81 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளும், 9 இடங்கள் கே.கே.நகர் ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியிலும் உள்ளன.

    இந்த இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு மருத்துவ கலந்தாய்வு நாளை (26-ந்தேதி) நடக்கிறது. ஓமாந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.

    சேலத்தில் உள்ள அன்னபூர்ணா சுயநிதி மருத்துவக் கல்லூரியில் 75 இடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஏற்கனவே சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 64 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள 139 எம்.பி.பி.எஸ். இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் 3 பல் மருத்துவ இடங்கள் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 440 பல் பட்டபடிப்பு இடங்கள் ஆகியவற்றுக்கு வருகிற 28-ந்தேதி கலந்தாய்வு நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×