search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களுக்கு விதவிதமான சமையல்களை செய்ய உதவும் குக்கிங் ஆப்ஸ்
    X

    பெண்களுக்கு விதவிதமான சமையல்களை செய்ய உதவும் குக்கிங் ஆப்ஸ்

    எப்போதும் பழைய உணவுகளையே ஒரே மாதிரி சமைத்து போர் அடித்து போனவைக்கு எண்ணற்ற சமையல் குறிப்புகளை வீடியோ காட்சிகளாக அளிக்கக்கூடிய குக்கிங் ஆப்ஸ்கள் பல வந்துள்ளன.
    நாம் நமது ஸ்மார்ட் போன்களை எங்கு செல்லும்போதும் உடனே எடுத்து செல்கின்றோம். நமது அலுவலகங்கள், வரவேற்பறை மற்றும் படுக்கயறை என நம்முடன் பயணிக்கும் ஸ்மார்ட்போன்கள், தற்போது சமையலறைக்கு எடுத்து செல்லத்தக்கதாக மாற்றம் பெற்றுள்ளது. ஏனென்றால் அதற்குரிய தேவை ஏற்பட்டு உள்ளது.

    பெண்களுக்கு சமையலறையில் எப்போதும் பழைய உணவுகளையே ஒரே மாதிரி சமைத்து போர் அடித்து போனவைக்கு எண்ணற்ற சமையல் குறிப்புகளையும், சமையல் செய்யும் குறைகளையும் தெளிவான இயக்க மற்றும் வீடியோ காட்சிகளாக அளிக்கக்கூடிய குக்கிங் ஆப்ஸ்கள் பல வந்துள்ளன. இந்த குக்கிங் ஆப்ஸ்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ios இயங்குதளங்களில் இயங்கக்கூடிய வகையில் கிடைக்கின்றன.

    அதுபோல் குக்கிங் ஆப்ஸ்கள் பல செலுத்தியும், செலுத்தாமலும் தரவிளக்கம் செய்யக்கூடியவாறு உள்ளன. வீட்டில் ஒருவர் நன்கு சமைக்கக்கூடியவராக பிறர் வெறும் சுடுதண்ணீர் வைக்கக்கூடிய வகையிலும் அடுப்பங்கறைக்கு செல்வர். ஆனால் குக்கிங் ஆப்ஸ் துணையுடன் செல்லும் எவரும் ஓர் சூப்பர் பைவ் ஸ்டார் செப்-ஆக மாற்றம் பெற்றுவிடுவர்.

    மிக சிறந்த குக்கிங் ஆப்-ஆக திகழும் பிக்-ஓவன் :

    சுமார் 3,50,000 உணவு குறிப்புகளை தன்னகத்தே வைத்துள்ளது இந்த குக்கிங் ஆப். பிக் ஓவன் துணையாக கொண்டால் சமைப்பது மிக சுலபம். உலகளவில் மிக சிறந்த குக்கிங் ஆப் என பெயர் பெற்றுள்ள பிக் ஓவன் விலை மதிப்புமிக்க குக்கிங் ஆப். ஆம் இதனை பணம் செலுத்தியே பெற்றுக் கொள்ளமுடியும். விதவிதமான சமையல் குறிப்புகள், சிறுகாட்சி படங்கள், ஒவ்வொரு உணவு வகைக்கு தேவையான துல்லியமான மளிகை சாமான்கள் பட்டியல் என சமையலறை சாம்ராஜ்யமே இந்த குக்கிங் ஆப்ஸ்-ல் உள்ளது.



    இந்திய உணவுக்கான இண்டியன் ரெசிபி :

    இந்தியாவின் பிரத்யேகமான உணவுகளை தயார் செய்யக்கூடிய வழிமுறைகள், தேவைப்படும் பொருட்கள், ஆலோசனைகள், தயார் செய்யும்விதம் போன்றவைகளுடன் கூடிய குக்கிங் ஆப்ஸ்தான் இண்டியன் ரெசிபி. இது ஓர் இலவச ஆப் என்பதுடன் ஆன்ட்ராய்டு மற்றும் ios ஆகிய இரு இயங்குதளங்களிலும் இயங்கக்கூடிய தன்மை கொண்டது.

    ஆல் ரெசிபி டாட் காம் - டின்னர் ஸ்பின்னர் :

    இந்த குக்கிங் ஆப்ஸ் மூலம் சில தொடுதல்கள் மூலம் சுவைமிகு உணவு தயாரிப்புகள் அறிய முடியும். இந்திய உணவுகள், சர்வதேச உணவுகள், சைவ உணவுகள், அசைவ உணவுகள் என்பதுடன் குறைந்த கலோரி உள்ள உணவுகள் கூட வகைப்படுத்தப்படுகின்றன.

    கிச்சன் ஸ்டோரிஸ்:-

    இலவசமாய் பெறக்கூடிய இந்த ஆப் மூலம் பல சிறப்பு வகை உணவுகளையும் தயார் செய்ய முடியும். எக்கச்சக்கமான சமையல் குறிப்புகள், ஹெச்டி வீடியோ ஆலோசனைகள், படிப்படியான நிலையில் போட்டோ அறிவிப்புகள், எப்படி செய்வது என்ற வீடியோ பல புதிய துணுக்குகள் மற்றும் வித்தைகளை கூறுகின்றன. அதுபோல் நமக்கு தேவையான உணவு அளவுகளை குறிப்பிட்டால் எந்தெந்த மளிகை பொருட்கள் எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை துல்லியமாக கூறிவிடுகிறது.

    குக்கிங் ஆப்ஸ்களில் தற்போது ஆர்கானிக் சமையல் குறிப்புகள், இயற்கை உணவு குறிப்புகள், பேக்கரி அயிட்டங்கள் என ஒவ்வொன்றிற்கு ஏற்ற சிறப்பு பிரிவுகளும் கிடைக்கின்றன.
    Next Story
    ×