search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வார்த்தைகளில் வழுக்கி விழுந்திட வேண்டாம்
    X

    வார்த்தைகளில் வழுக்கி விழுந்திட வேண்டாம்

    ஆண்கள்- பெண்களுக்கு இடையிலான இயல்பான உரையாடல்களும், அதில் கிண்டல்கள், சீண்டல்கள், எல்லைமீறல்கள், இரட்டை அர்த்தத் தொனிகளும் கூட கூடியிருக்கின்றன.
    ஆண்களும் பெண்களும் தனித் தனித்தீவுகளாக இருந்த நிலை மாறி, இரு தரப்பும் நெருங்கி இருக்கும், கலந்துறவாடும் வாய்ப்புகள் இன்று அதிகரித்திருக்கின்றன.

    அதற்கேற்ப, ஆண்கள்- பெண்களுக்கு இடையிலான இயல்பான உரையாடல்களும், அதில் கிண்டல்கள், சீண்டல்கள், எல்லைமீறல்கள், இரட்டை அர்த்தத் தொனிகளும் கூட கூடியிருக்கின்றன.

    ஆனால், ஜாலியாக பேசுகிறோம் என்ற பெயரில் எல்லை தாண்டுவதில் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள், உறவு ஆலோசனை நிபுணர்கள்.

    “ஜாலியாக அடிக்கப்படும் கமெண்டுகளை, அவை, இரட்டை அர்த்தம் உடையதாகவே இருந்தாலும் முதிர்ச்சியுற்ற ஆண்களும், பெண்களும் ரசிக்கிறார்கள். ஆனால் ஏதாவது உள்நோக்கத்தோடு இரட்டை அர்த்தத்தொனியில் பேசினால் அது நிச்சயம் மோசமானது” .

    மணவாழ்க்கை நடத்தும் தம்பதிகளில் ஒருவர், இன்னொரு எதிர்பால் நபர் மீது பாலியல் நாட்டம் கொண்டு அதை வார்த்தைகளில் மறைமுகமாக வெளிப்படுத்த முயன்றால் அவரது திருமண உறவிலேயே பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்.

    எல்லை மீறும் பேச்சுகளை, திருமணமான ஆண் அல்லது பெண் நாகரிகமாகக் கையாள வேண்டும். அதை ஆதரிக்கவும் கூடாது, அதேநேரம் அம்மாதிரி பேசுபவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளவும் கூடாது. ஜாலியாக பேசியபடியே, அந்த சூழலில் இருந்து விலகி, தான் அந்த மாதிரியான பேச்சுக் குரிய ஆள் இல்லை என்பதை நிரூபித்துவிடவேண்டும்” என்கிறார்.

    தவறான நோக்கத்துடன் எல்லை தாண்டிப் பேசினால் நிச்சயம் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.

    வார்த்தைகள்... ஜாக்கிரதை!
    Next Story
    ×