search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மொபைல் வங்கிச்சேவை - காலத்திற்கேற்ற தேவை
    X

    மொபைல் வங்கிச்சேவை - காலத்திற்கேற்ற தேவை

    மொபைல் போன் மூலம் உடனடியாக வங்கிகளுக்கிடையே பண பரிவர்த்தனை செய்துக்கொள்ளும் வசதியே இந்த ஐஎம்பிஎஸ் என்ற இமிடியேட் பேமென்ட் சர்வீஸ்.
    மொபைல் போன் இல்லாத நபர்களே இன்று இல்லை என்று சொல்லுமளவிற்கு எல்லோர் கைகளிலும் தவழ்ந்துக்கொண்டிருக்கிறது கைப்பேசிகள். அதே போல் மத்திய அரசின் திட்டத்தின் படி வங்கி கணக்கு ஏழை எளியவர்கள் அனைவருக்குமே சென்று சேர வேண்டும் என்று இயங்கிக்கொண்டிருக்கின்றன வங்கிகள். தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அனைத்துமே பல நுகர்வோர் சேவைகளை அளித்து வருகிறது. அந்த சேவைகள் அனைத்தையும் நம் மொபைல் போன் மூலம் பெறக்கூடிய வகையில் பல ஆப் களையும் அவை அறிமுகப்படுத்தி வருகின்றன.

    மொபைல் போன் மூலம் நம் வங்கிக்கணக்கைப்பற்றிய தகவல்கள் பெறுவது பண பரிரர்த்தனை செய்வது, கடன் அட்டை க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட் (இருப்பு அட்டை) மூலம் பண பரிவர்த்தனை செய்வது, மின் கட்டணம் செலுத்துவது, வரி செலுத்துவது, இணையம் மற்றும் தொலைப்பேசி கட்டணம் செலுத்துதல், கணக்கு மேம்படுத்துதல் மற்றும் இதர பல இணைய வங்கிச்சேவைகளை மொபைல்போன் மூலம் செய்யலாம்.

    மொபைல் வங்கிச் சேவையின் மூலமாக பணபர்த்தனைகளின் அளவு ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. 2014 ஏப்ரலில் ரூ.3296 கோடியாக இருந்த இந்த அளவு 2015 ஆம் ஆண்டு ரூ.18869 கோடியாக உயர்ந்தது. இதில் கிட்டத்தட்ட ஐந்தரை மடங்கு அதிகரித்திருப்பது தெரிகிறது.

    மொபைல் போன் மூலம் உடனடியாக வங்கிகளுக்கிடையே பண பரிவர்த்தனை செய்துக்கொள்ளும் வசதியே இந்த ஐஎம்பிஎஸ் என்ற இமிடியேட் பேமென்ட் சர்வீஸ். ஏடிஎம், இன்டர்நெட் பாங்கிங் மூலமும் இச்சேவை செய்வதற்கான விரிவாக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    இணையதள வங்கிச் சேவையை வைத்திருக்கும் அனைத்து நபர்களும் இந்த ஐஎம்பிஎஸ் சேவையை பெற முடியும். இந்த சேவை மூலம் பண பரிவர்த்தனையை எல்லளவு சுலபமாக செய்ய முடியும் என்பதைப்பார்ப்போம். உதாரணத்திற்கு பாபுவிற்கு அடிக்கடி சூர்யாவிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்று வைத்துக்கொள்வோம் பாபு, சூர்யாவை ஐஎம்பிஎஸ் ‘பெனிஃபிஷியரி’ ஆக இணைத்துக்கொள்ள வேண்டும். அவருக்கு ஒரே நாளில் ஒரு லட்சம் ரூபாய் கூட உடனடியாக அனுப்ப முடியும். சூரியாவின் மொபைல் எண்ணை மட்டும் கொடுத்தே அவரை ‘பெனிஃபிஷியரி’ ஆக ஆக்கிக் கொள்ள முடியும். இதற்கு சூரியாவின் மொபைல் மணி ஐடென்டி பிகேஷன் எண்ணை கொடுக்க வேண்டும். இந்த எம்எம்ஐடி எண் என்பது ஏழு எண்கள் கொண்ட பிரத்யேக எண். இதில் கடைசி நான்கு எண்கள் ஐஎம்பிஎஸ் அளிக்கும் வங்கி அளிக்கும் பிரத்யேக எண்ணாகும்.

    இந்த சேவை உடனடியாக பணபரிவர்த்தனை செய்ய மிகவும் உதவியாக இருக்கும் ஒரு வங்கிச்சேவையாகும். இச்சேவையை மொபைல் போன் மூலம் மட்டுமே செய்ய முடியும். நாம் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கி எந்தெந்த வங்கியுடன் ஐஎம்பிஎஸ் செய்ய கூட்டு வைத்துள்ளதோ அந்த வங்கிகள் மூலம் மட்டும் தான் இந்த சேவையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×