search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கால்களுக்கு அழகூட்டும் கலர்புல் காலணி - பஞ்சாபி ஜீத்தி
    X

    கால்களுக்கு அழகூட்டும் கலர்புல் காலணி - பஞ்சாபி ஜீத்தி

    கால்களுக்கு அணிகின்ற காலணிகள் மிக வண்ணமயமாய் இருக்கின்றவாறு வடமாநிலங்களில் உருவாக்கப்படுகிறது.
    கால்களுக்கு அணிகின்ற காலணிகள் மிக வண்ணமயமாய் இருக்கின்றவாறு வடமாநிலங்களில் உருவாக்கப்படுகிறது. இத்தகைய காலணிகளுக்கு ஜீத்தி காலணிகள் என்று பெயர். பெரும்பாலும் பஞ்சாபி ஜீத்தி காலணி என்றால் தான் அனைவருக்கும் தெரியும். உலக புகழ்பெற்ற பஞ்சாபி ஜீத்தி காலணிகள் சிறந்த வகை தோலால் செய்யப்பட்டு அதன் மேல் வண்ண துணிகளும், தங்கம் மற்றும் வெள்ளி நூலின் மூலமாக கலைநுட்ப வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.

    இன்றைய நூளில் ரப்பர் காலடிப்புறம் ஜீத்தின் என்றவாறு பலதரப்பட்ட ஜீத்திகள் வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்து உலகம் முழுவதும் பஞ்சாபி ஜீத்தி காலணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    பூத்தையல் வேலைப்பாடு கொண்ட அழகிய காலணிகள் :

    அதிகபட்ச கைவினை வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படும் ஜீத்தி காலணிகள் அதன் வடிவமைப்புக்கு ஏற்ப விலையிலும், உருவத்திலும் மாறுபடுகின்றன. இந்த ஜீத்தி காலணிகள் வலது இடது என்ற பாகுபாடு கிடையாது. நாம் அணிந்து நடக்க ஆரம்பிக்கும் போது கால்களுக்கு ஏற்ப அதுவே உருவத்தை மாற்றி கொள்ளும் தட்டையான அடிப்பாகம் கொண்ட இந்த காலணிகள் ஆண், பெண் இருபாலருக்கும் ஒரே அமைப்பை கொண்டிருக்கும். சில சமயம் ஆண்கள் காலணிகளின் முன்புற தோற்றம் மாறுபட்டவாறு இருக்கும். இன்றைய நாளில் பஞ்சாபி ஜீத்தி காலணிகள் அனைத்து தரப்பு மக்களும் விழாகாலங்களிலும், திருமண நிகழ்வுகளிலும் அணிந்து கொள்கின்றனர்.

    தோலால் செய்யப்படும் காலணியின் அமைப்பு என்பது கால்விரல்களை மூடும் பகுதியில் அரைவட்ட (அ) வடிவில் பூத்தையல் செய்யப்பட்ட மேற்புறம் கொண்ட வாயாக இருக்கும். சாதாரண தோல் காலணியை வண்ணமேற்துணி, கற்கள், உலோக மணிகள், தங்கநிற சரிகை நூல் போன்றவற்றால் அலங்கரித்து அழகிய வண்ணமயமான காலணியாக உருவாக்கப்படுகிறது.

    மகாராஜாக்கள் பயன்படுத்திய ஜீத்தி காலணிகள் :

    இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப்பில் பணக்கார ஜமீன்தார்கள், நவாப்புகள், ராஜாக்கள், ராணிக்கள் அணிய பயன் படுத்திய காலணிதான் ஜீத்தி. தங்களது ராஜ கம்பீரத்தோற்றத்திற்கு பளபளப்பான தங்கநிற ஜீத்திகளே அழகாக இருந்தால், அதில் பலவித மாற்றம் செய்யப்பட்டு உயர்ரக காலணிகளாய் உருவாக்கப்பட்டன.

    ஆண்-பெண் இருவருக்குமான ஜீத்திகள் :

    ஆண், பெண் என இருபாலருக்கும் இந்த கலர்புல் ஜீத்திகளை அணிகின்றனர். இந்த ஜீத்தி காலணிகள் பார்ப்பதற்கு மோஜாரி காலணிகள் போன்றே இருக்கும். ஜீத்தி காலணிகள் ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரியாய் உருவாக்கப்பட்டாலும் ஆண்களுக்கான ஜீத்தியின் முன்புறம் மேல் நோக்கி வளைக்கப்பட்டவாறு கூரான முனை கொண்டவாறு உள்ளது. இதனை நோக் என்று கூறுவர். ஆண்களுக்கான ஜீத்தி காலணியை குஸ்லயா காலணி என்றும் அழைப்பர். பெண்கள் அணியும் ஜீத்திகள் கணுக்காலின் பின்பகுதி இல்லாமல் இருக்கும். அலங்காரமான வண்ண ஜீத்திகள் தவிர்த்து சாதாரணவகை ஜீத்திகளை பலர் அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    ஜீத்தி காலணி அமைப்பில் புதிய ஷீக்கள் :


    ஆண்கள் அணிய ஏற்றவாறு பஞ்சாபி ஜீத்தி மாடலில் பழுப்பு மற்றும் கருப்பு நிற ஷீக்கள் தற்போது விற்பனைக்கு வருகின்றன. வித்தியாசமான ஷீ-அமைப்பு என்பதுடன் கழற்றி மாட்ட சுலபமான ஷீ வாகவும் உள்ளது. நிறைய இளைஞர்கள் ஜீத்தி ஷீ-க்களை அதன் பெயர் தெரியாமலே அணிந்து செல்கின்றனர். ஜீத்தி ஷீக்கள் அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற ஷீ-வாகவும் உள்ளது.
    Next Story
    ×