search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம்?
    X

    பெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம்?

    கால்களுக்கு கொலுசு அணியும்போது புதுவித அழகு தரும். பெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம் என்பதை பார்க்கலாம்.
    பெண்களின் கால்களுக்கு இயற்கை அழகு கொடுப்பது என்றால் அது கொலுசு தான். கால்களில் கொலுசினை அணிந்திருக்கும் பெண்கள், நடந்து வருகையில் அந்த முத்துக்கள் எழுப்பும் ஓசையை ரசித்து கேட்கலாம்.

    கால்களுக்கு கொலுசு அணியும்போது புதுவித அழகு தரும்.

    பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள் என அனைத்து பெண்களும் கொலுசு அணிந்திருப்பார்கள். சுடிதார், சேலை, தாவணி போன்ற ஆடைகளுக்கு கொலுசு கூடுதல் அழகினை தரும். ஆனால் ஜீன்ஸ் மற்றும் அரை ஜீன்ஸ்அணிந்து வெளியில் சென்றால், கொலுசு அணிவேண்டாம். ஏனெனில் மொடர்ன் ஆடைகளுக்கு கொலுசு நன்றாக இருக்காது, அதுமட்டுமின்றி ஆடை அலங்காரத்தை கெடுத்துவிடும்.

    கொலுசுகள் பல்வேறு டிசைன்களில் வடிவமைக்கப்படும், 5 முத்துக்கள் கொண்டது, 3 முத்துக்கள் கொண்டது.

    மெல்லிய பட்டையிலான கொலுசு மற்றும் தடிமனான மொடல்கள், இரண்டிற்கும் இடைபட்ட மொடல் என பல்வேறு மொடல்கள் இருக்கும்.

    இதில் பெண்கள் கவனிக்க வேண்டியது, தங்கள் கால்களுக்கு எந்த மாரியான கொலுசு அழகாக இருக்கும் என்பதை பார்த்து அணியவேண்டும்.

    கால்கள் கொஞ்சம் தடிமனாக இருக்கும் பெண்கள் மெல்லிய கொலுசு போட்டால், அவ்வளவு எடுப்பாக தெரியாது, எனவே கொஞ்சம் தடிமனான கொலுசினை அணியுங்கள்.

    சற்று சிவப்பான நிறம் மற்றும் மெல்லிய கால்களை கொண்ட பெண்கள், 3 முத்துக்கள் கொண்ட மெல்லிய பட்டையிலான கொலுசினை அணியுங்கள். 
    Next Story
    ×