search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காலை டிபன் கேரளா ஸ்டைல் நேந்திரன் புட்டு
    X

    காலை டிபன் கேரளா ஸ்டைல் நேந்திரன் புட்டு

    குழந்தைகளுக்கு காலை, மாலை நேர டிபனாக கேரளா ஸ்டைல் பழப்புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இந்த புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புட்டு மாவு - 200 கிராம்,
    நேந்திரன் வாழைப்பழம் - ஒன்று,
    பலாச்சுளை - 10,
    தேங்காய்த் துருவல் - ஒரு கப்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
    நெய் -  50 மில்லி,
    உலர் திராட்சை  சிறிதளவு.



    செய்முறை :

    வாழைப்பழம், பலாச்சுளையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நறுக்கிய பழங்களை புட்டு மாவுடன் சேர்க்கவும்.

    இதனுடன் உலர் திராட்சை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து, நெய் சேர்த்துப் பிசிறி, கொள்ளவும்.

    பிசைந்த மாவை புட்டுக் குழலில் அடைத்து, ஆவியில் 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

    சூப்பரான பழப்புட்டு ரெடி.

    குறிப்பு: காய்கறிகளைப் பயன்படுத்தியும் இதே முறையில் புட்டு தயாரிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×