search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு
    X

    சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு

    உடல் உபாதைகள், வயிற்று பிரச்சனைளுக்கு பூண்டு மிகவும் நல்லது. இன்று செட்டிநாடு ஸ்டைலில் பூண்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பூண்டு - 30 பல்
    சின்ன வெங்காயம் - 20
    தக்காளி - 1
    மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
    குழம்பு மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
    மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி
    புளி - நெல்லிக்காய் அளவு
    நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

    தாளிக்க :

    கடுகு - 1 தேக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - 1 /2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை :

    * புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

    * வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை.

    * தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    * தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    * அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு திக்காக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

    * சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு ரெடி.

    * பூண்டை வதக்கும்போது அதனுடன் சுண்டைக்காய் வற்றல் அல்லது மனத்தக்காளி வற்றல் சேர்த்தால், வத்தல் குழம்பு என ஆகிவிடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×