search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான சைடிஷ் கத்திரிக்காய் தக்காளி தொக்கு
    X

    சூப்பரான சைடிஷ் கத்திரிக்காய் தக்காளி தொக்கு

    தக்காளி, சாதம், தயிர் சாதம், பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் தக்காளித் தொக்கு சூப்பராக இருக்கும். இன்று இந்த தொக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிறு கத்திரிக்காய் - 10
    பெரிய தக்காளி - 2
    மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    பூண்டு - 5 பல்
    கடுகு - 1 டீஸ்பூன்
    உளுந்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

    அரைக்க :

    மல்லி (தனியா) - 1 டீஸ்பூன்
    புளி - பெரிய எலுமிச்சை அளவு
    சீரகம் - அரை டீஸ்பூன்
    மிளகு - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கத்திரிக்காயைக் கழுவி அடிப்பாகம் வரை நான்காக கீறி விட்டுக் கொள்ளவும்.

    * தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கத்திரிக்காயை 10 நிமிடம் ஊற வைக்கவும்.

    * அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த விழுதை கத்திரிக்காயின் உள்ளே வைத்து 20 நிமிடம் தனியாக ஊற வைக்கவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதில் தக்காளியைச் சேர்த்து கரைய வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் ஊற வைத்துள்ள கத்திரிக்காயைச் சேர்த்து மெதுவாக புரட்டி விடவும்.

    * தீயை சிம்மில் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து, மீதம் இருக்கும் அரைத்த பேஸ்ட், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.

    * கத்திரிக்காய் உடையாமல் புரட்டி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது எடுத்துப் பரிமாறவும்.

    * கத்திரிக்காய் தக்காளி தொக்கு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×