search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான சைடு டிஷ் சில்லி முட்டை மசாலா
    X

    சூப்பரான சைடு டிஷ் சில்லி முட்டை மசாலா

    சில்லி முட்டை மசாலா சிறிது கிரேவி போல் இருப்பதால் மசாலாவின் சுவை தான் தனி சிறப்பு. இந்த ரெசிபியை செய்வது மிக சுலபம். இந்த முட்டை மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்..
    தேவையான பொருட்கள் :

    வேக வைத்த முட்டை - 2
    பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    கிராம்பு, பூண்டு - 2
    உப்பு - சுவைக்கேற்ப
    சோயா சாஸ் -  1 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    புளிக்கரைசல் - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வேக வைத்த முட்டையின் ஓட்டை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

    * அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் வதங்கிதும், காய்ந்த மிளகாய்த்தூள் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் இட்டு 1 நிமிடங்கள் நன்கு கிளறி விடவும்.

    * அடுத்து அதில் சோயா சாஸ், கெட்டியான புளிக்கரைசல், உப்பு இட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

    * இரண்டாக நறுக்கிய முட்டையை மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து அதன் மேலாக கொத்தமல்லி இலையைத் தூவி பரிமாறலாம்.

    * சில்லி முட்டை மசாலா ரெடி!

    * சில்லி முட்டை மசாலாவை சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் அல்லது ரொட்டி, பராத்தா உடன் சேர்த்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×