search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு
    X

    செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு

    சைவ பிரியர்களுக்கு காளான் மிகவும் பிடிக்கும். இன்று செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.









    தேவையான பொருட்கள் :

    காளான் - 300 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    கொத்துமல்லி விதை(தனியா) - 1 ஸ்பூன்
    சீரகம் - 3/4 ஸ்பூன்
    சோம்பு - 1/2 ஸ்பூன்
    பட்டை- 2 இன்ச் துண்டு
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    காய்ந்த மிளகாய் - 5 (அ) காரத்துக்கேற்ப
    தேங்காய் - கால் மூடி
    எண்ணெய்
    உப்பு
    கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை

    செய்முறை :

    * ஒரு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக மசிந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். அனைத்தும் நன்றாக ஆறியதும் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    * காளானை நன்கு கழுவி, நீரில்லாமல் துடைத்து சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    * குழம்பு நன்றாக கொதி வந்ததும், காளான் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    * குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

    * சூப்பரான காளான் குழம்பு ரெடி.

    * இந்த குழம்பு சாதம், தோசை, இட்லி இவற்றுக்கு பொருத்தமாய் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×