search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர ஸ்நாக்ஸ் வெஜிடபிள் - சீஸ் சோமாஸ்
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் வெஜிடபிள் - சீஸ் சோமாஸ்

    மாலையில் குழந்தைகளுக்கு சுவையான சிற்றுண்டியாக காய்கறிகளால் ஆன சத்தான சோமாஸ் செய்து கொடுத்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 2 கப்
    உருளைக் கிழங்கு - 2
    கேரட், பீன்ஸ், - 2 கப்
    சீஸ் - அரை கப்
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன்
    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 2 டீ ஸ்பூன்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    கறிமசாலா தூள் - 1 டீஸ்பூன்
    பிரெட் தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    நெய் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    பூரணம் செய்முறை :

    * உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

    * சீஸை துருவிக்கொள்ளவும்.

    * காய்கறிகள், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்..

    * வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது பட்டை, சோம்பு போட்டு தாளித்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி நன்றாக சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.

    * மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.

    * சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து மிதமாக தீயில் எரிய விடவும்.

    * காய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். நன்றாக கெட்டியாக சேர்ந்தாற்போல் வர, ரொட்டித்தூள் சேர்த்து கிளறிக் கொள்ளலாம். மசாலா நன்றாக ஆறியவுடன் அதனுடன் துருவிய சீஸை போட்டு நன்றாக கிளறி வைக்கவும்.

    சோமாஸ் செய்முறை :

    * மைதா மாவை சலித்து எடுத்து கொஞ்சம் நெய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    * மாவில் ஒரு சிறு உருண்டை எடுத்து இலேசாக வட்டமாக தேய்த்து காய்கறி பூரணத்தை நடுவில் வைத்து மடித்து ஓரங்களை சோமாஸ் கத்தியால் வெட்டவும்.

    * இதேபோல் மொத்தமாக சோமாஸ்கள் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்துள்ள சோமாஸ்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சுவையான காய்கறி சீஸ் சோமாஸ் ரெடி.

    * தொட்டுக்கொள்ள தக்காளி கெட்ச்அப் ஏற்றது. மாலை நேரத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×