search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான மஷ்ரூம் - சிக்கன் குருமா செய்வது எப்படி
    X

    சூப்பரான மஷ்ரூம் - சிக்கன் குருமா செய்வது எப்படி

    சப்பாத்தி, பரோட்டாவிற்கு மஷ்ரூம், சிக்கன் சேர்த்து குருமா செய்வதால் சூப்பராக இருக்கும். இப்போது அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    பட்டன் காளான் - 200 கிராம்
    சிக்கன் - 250 கிராம் (எலும்பு இல்லாதது)
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - கால்டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி, புதினா - சிறிது
    தேங்காய் - 3 பத்தை
    முந்திரி - 10
    மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
    சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
    மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை :

    * ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மற்றொரு வெங்காயத்துடன், தக்காளி, தேங்காய், முந்திரி சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து எடுக்கவும்.

    * காளானை கொதிக்கும் நீரில் போட்டு அலசி, நறுக்கி வைக்கவும்.

    * சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

    * அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

    * அத்துடன் சிக்கன், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன் காளான் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    * நன்கு கொதி வந்தவுடன் அரைத்த வைத்துள்ள விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.

    * அடுப்பை சிம்மில் வைத்து குருமா நன்றாக கொதித்து கிரேவி பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

    * சுவையான சிக்கன் - காளான் குருமா ரெடி.

    * சப்பாத்தி, பரோட்டா, நாண், ஆப்பம், தோசை, இட்லி, சாதம் வகைகளுடனும் பரிமாறலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×