search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான எக் 65
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான எக் 65

    சிக்கன் 65 கேள்விபட்டிருப்பீர்கள் எக் 65 கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சரி இப்போது எக் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 4
    சோம்பு - 1 ஸ்பூன்
    பூண்டு - 5 பல்
    சின்ன வெங்காயம் - 5
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    சீரகம் - 1/2 ஸ்பூன்
    கறிவேப்பில்லை - சிறிது
    சோள மாவு - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப

    செய்முறை :

    * முட்டையை வேகவைத்து, சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். (ஒரு முட்டையை இரு பாதிகளாக வெட்டிக்கொள்ளலாம்)

    * சோம்பு, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகாய் தூள், கறிவேப்பில்லை ஆகியவற்றை மிக்சியில் போட்டு மையாக அரைத்துகொள்ளவும்.

    * இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

    * வேகவைத்த முட்டை துண்டுகளின் மீது இந்த மசாலா கலவையை பூசி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டையை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும். 

    * சூப்பரான எக் 65 ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×