search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கறுப்பு அரிசி வெஜிடபிள் தோசை
    X

    கறுப்பு அரிசி வெஜிடபிள் தோசை

    கறுப்பு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கறுப்பு அரிசி, காய்கறிகளை வைத்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கறுப்பு அரிசி -  ஒரு கப்,
    உளுந்து - கால் கப்,
    வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
    வெங்காயம்- 1,
    பீன்ஸ் - 10,
    கேரட் - 1,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    ப.மிளகாய் - 2,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கறுப்பு அரிசி, உளுந்து, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.

    நன்றாக ஊறியதும் அதனை நன்றாக அரைத்து, தேவையான உப்பு சேர்த்து கலந்து புளிக்க வைக்கவும் (அல்லது ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்து பயன்படுத்தலாம்).

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், பீன்ஸ், உப்பு சேர்த்து வேக விடவும். நன்றாக வெந்ததும் அதை கரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

    சத்தான கறுப்பு அரிசி வெஜிடபிள் தோசை ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள ஏதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×