search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான டிபன் சிறுதானிய வெங்காய பெசரட்டு
    X

    சத்தான டிபன் சிறுதானிய வெங்காய பெசரட்டு

    காலை உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று சிறுதானியங்களை வைத்து பெசரட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முழு பாசிபயறு - 1/2 கப்
    சோளம், தினை, குதிரைவாலி, வரகு கலந்து - 1 கப்
    பச்சைமிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    வெங்காயம் - 1
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    பெருங்காயம் - விரும்பினால் சேர்க்கலாம்



    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிறுதானியம், பாசிபயறு சேர்த்து நாலு மணி நேரம் ஊறவிடவும்.

    * ஊறவைத்தை மிக்சியில் போட்டு அதனுடன் இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து உப்பு. பெருங்காயம் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி அதன் மேல் வெங்காயத்தை தூவி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். அடை போல வார்க்கலாம்.

    * சத்தான டிபன் சிறுதானிய பெசரட்டு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×