search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான கடுகு சாதம் செய்வது எப்படி
    X

    சூப்பரான கடுகு சாதம் செய்வது எப்படி

    உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் சக்தி கடுகுக்கு உண்டு. இன்று கடுகை வைத்து சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிரியாக வேகவைத்த சாதம் - ஒரு கப்,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு -  தலா ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - ஒன்று,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

    பொடி செய்ய :

    தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    புளி - சிறிதளவு,
    காய்ந்த மிளகாய்,
    பச்சை மிளகாய் - தலா ஒன்று,
    பெருங்காயத்தூள்,
    வெல்லம் - தலா கால் டீஸ்பூன்.



    செய்முறை :

    * பொடி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து (வறுக்க வேண்டாம்) கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... வேகவைத்த சாதம், அரைத்த பொடி, உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான கடுகு சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×