search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கேரட் லஸ்ஸி
    X

    கேரட் லஸ்ஸி

    கேரட்டை பச்சையாகவோ, ஜூஸ் போட்டோ, மில்க் ஷேக் செய்தோ அல்லது லஸ்ஸி வடிவிலோ குடிக்கலாம். குழந்தைகள் அதிகம் விரும்பும் கேரட் லஸ்ஸியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கெட்டித் தயிர் - 1 கப்
    சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
    கேரட் - 2
    பால் - 1/4 கப்
    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
    பாதாம் பருப்பு -  தேவையான அளவு


    செய்முறை:

    முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை சிறு குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் குக்கரைத் திறந்து, மிக்ஸியில் போட்டு, பால், சர்க்கரை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் தயிர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு மென்மையாக மீண்டும் அரைத்து, டம்ளரில் ஊற்றி, பாதாம் பருப்பை சீவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான கேரட் லஸ்ஸி தயார்.
    Next Story
    ×