search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான சத்தான ஆரஞ்சு - பட்டாணி ரைஸ்
    X

    சூப்பரான சத்தான ஆரஞ்சு - பட்டாணி ரைஸ்

    ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவு உள்ளது. இன்று ஆரஞ்சு பழத்தை வைத்து சூப்பரான சத்தான ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசுமதி அரிசி - 2 கப்.
    பட்டை, லவங்கம் - 1.
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 3.
    பட்டாணி - 1 கப்.
    முந்திரிப் பருப்பு - 6.
    திராட்சை - 4.
    ஆரஞ்சு சாறு - 2 கப்.
    நெய் - 2 ஸ்பூன்.



    செய்முறை:

    * பாசுமதி அரிசியை நன்றாக கழுவி கொள்ளவும்.

    * கழுவிய பாசுமதி அரிசியை ஆரஞ்சு சாறு, தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

    * ஒரு பிரஷர் குக்கரில், ஊறவைத்த அரிசியை உப்பு சேர்த்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி தனியாக வைக்கவும்.

    * ஒரு வாணலியில் நெய் விட்டு, பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * பிறகு உப்பு, பட்டாணி சேர்த்து கிளறவும்.

    * பட்டாணி வெந்தவுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.

    * அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்து பரிமாறவும்.

    * சூப்பரான சத்தான ஆரஞ்சு - பட்டாணி ரைஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×