search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அரிசி ரவை கீரை கொழுக்கட்டை
    X

    அரிசி ரவை கீரை கொழுக்கட்டை

    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சத்து நிறைந்த உணவான அரிசி ரவை கீரை கொழுக்கட்டை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 250 கிராம்,
    அரைக்கீரை  - ஒரு கைப்பிடி அளவு,
    மிளகு - ஒரு டீஸ்பூன்,
    துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்,
    வெங்காயம் - 1
    கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு  - தலா ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - ஒன்று,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய் - 50 மில்லி,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    * கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.



    * அரிசியுடன் துவரம்பருப்பு, மிளகு சேர்த்து ரவை போல உடைத்துக் கொள்ளவும்.

    * வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

    * கனமான பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயை விட்டு, சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின் வதக்கிய கீரை சேர்க்கவும்.

    * ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

    * தண்ணீர் நன்கு கொதித்த உடன் அரிசி ரவையைத் தூவி, உப்பு சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.

    * அடுப்பை மிதமான தீயில் வைத்து, பத்திரத்தை மூடி வைத்து, வெந்தவுடன் இறக்கவும்.

    * வெந்த கலவையை பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, வைக்கவும்.

    * இட்லி சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்த கொழுக்கட்டைகளை வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

    * சத்து நிறைந்த அரிசி ரவை கீரை கொழுக்கட்டை ரெடி.

    குறிப்பு: கத்திரிக்காய் கொத்சு, வெங்காய கொத்சு இதற்கு சிறந்த காம்பினேஷன்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×