search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த ராகி ஆலு பரோட்டா
    X

    சத்து நிறைந்த ராகி ஆலு பரோட்டா

    வெயில் காலத்தில் கேழ்வரகை அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, உருளைக்கிழங்கு வைத்து சத்துநிறைந்த பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கோதுமை மாவு - 1 கப்
    ராகி மாவு - 1 கப்
    எண்ணெய், உப்பு - தேவைக்கு
    தயிர் - 3 ஸ்பூன்

    மசாலாவிற்கு :

    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - 1
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    ஓமம் - சிறிதளவு
    மிளகாய் தூள் - சிறிதளவு
    சீரகத்தூள் - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் ராகி, கோதுமை மாவை போட்டு தயிர், சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    * கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் வதங்கியதும் வேக வைத்து இருக்கும் கிழங்கை மசித்து சேர்க்கவும்.

    * பின்னர் அதில் மஞ்சள் தூள், பெருங்காயம், ஓமம், மிளகாய் தூள், சீரகபொடி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து ஆறவைக்கவும்.

    * தயார் செய்து வைத்து இருக்கும் ராகி கோதுமை மாவில் ஒரு உருண்டை எடுத்து கிண்ணம் போல் செய்து அதன் நடுவில் இந்த ஆலு மசாலாவை வைத்து மூடி பரோட்டாவாக உருட்டி வைக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள பரோட்டாவை போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    * சத்தான ராகி ஆலு பரோட்டா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×