search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஜீரண சக்தியை தூண்டும் சுக்கு மல்லி குழம்பு
    X

    ஜீரண சக்தியை தூண்டும் சுக்கு மல்லி குழம்பு

    வயிற்று கோளாறு, அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த சுக்கு மல்லி குழம்பை வாரம் இருமுறை செய்து சாப்பிடலாம். இப்போது இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சின்ன வெங்காயம் - 150 கிராம்,
    பூண்டு பற்கள் - 10,
    புளி - எலுமிச்சை அளவு,
    கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்,
    வெந்தயம், மிளகு, கடுகு, சீரகம்  - தலா கால் டீஸ்பூன்,
    சுக்கு மல்லி பொடி - ஒன்றரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - தேவையான அளவு,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    நல்லெண்ணெய் - 3 குழிக்கரண்டி,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * வெங்காயம், பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

    * புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து 1 ஸபூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்து ஆறியதும், மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

    * புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    * மீதமுள்ள நல்லெண்ணெயை கடாயில் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

    * இரண்டும் நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

    * இப்போத பொடித்து வைத்த பொடியையும், சுக்கு மல்லி பொடியை, உப்பு சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    * குழம்பு பக்குவம் வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

    * சூப்பரான சுக்கு மல்லி குழம்பு ரெடி.

    * இந்த சுக்கு மல்லி குழம்பு ஜீரண சக்தியை நன்கு தூண்டக் கூடியது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×