search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சைடு டிஷ் சன்னா பாலக்
    X

    சத்தான சைடு டிஷ் சன்னா பாலக்

    சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சன்ன பாலக் சூப்பராக இருக்கும். செய்துவம் எளிமையானது. சத்தானதும் கூட. இன்று இந்த சன்ன பாலக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    வெள்ளை கொண்டைக்கடலை - அரை கப்,
    பாலக்கீரை - ஒரு சிறிய கட்டு,
    வெங்காயம் - 2,
    தக்காளி - ஒன்று,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
    கஸ்தூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - ஒரு சிட்டிகை,
    சர்க்கரை, சீரகம் - தலா கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    * கொண்டைக் கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    * பாலக்கீரையை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து ஆற வைக்கவும்.

    * பச்சை மிளகாயுடன் கீரையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது போட்டு சிறிது வதக்கிய பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை விழுதாக அரைத்து சேர்த்து... உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அனைத்து நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது அரைத்த கீரை விழுதை சேர்க்கவும்.

    * அடுத்து இதனுடன் வெந்த கொண்டைக்கடலையை சேர்க்கவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம்).

    * இதனை 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கஸ்தூரி மேத்தி சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

    * சூப்பரான சைடு டிஷ் சன்னா பாலக் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×