search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி
    X

    சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி

    காலையில் சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடலுக்கும் மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சாமை காரப்புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி மாவு - 500 கிராம்,
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி,
    கடுகு - சிறிதளவு,
    உளுந்து - ஒரு தேக்கரண்டி,
    கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி,
    சீரகம் - ஒரு தேக்கரண்டி,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    கொத்தமல்லி  - சிறிதளவு,
    தக்காளி  - 1,
    சின்ன வெங்காயம்  - 250 கிராம்,
    காய்ந்த மிளகாய் - 4,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, 10 நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும்.

    * கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

    * பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.

    பலன்கள்:

    நீராவியில் வேகவைத்த உணவு என்பதால், உடலுக்கு நல்லது. விரைந்து செரிக்கும் தன்மை கொண்டது. காரம் சேர்ப்பதால், மேலும் சுவை அதிகமாகும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×